Skip to main content
        தொழுகை  கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி
                   
                            SUCCESS  THROUGH SALAAH

இக்கால இளைய சமுதாயத்தை கருதி  அவர்களை தொழுகையாளிகளாக ஆக்கிட மேலும் நாம் நமது தொழுகையை உயிரோட்டத்துடன் தொழுதிட  ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு' நீடூர் S.Aமன்சூர் அலி' அவர்களால் பல ஊர்களில்
"தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி(SUCCESS THROUGH SALAAH)"என்ற தலைப்பில் பலமுறை பயிலரகங்கள்  நடத்தப்பட்டது அதில் கலந்துக்கொண்ட மக்கள், பயனடைந்ததைக் கருத்தில்  கொண்டு இது தமிழ் பேசும் அனைத்து முஸ்லிம்களிடமும் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்துடன்,அங்கு கூறப்படும் கருத்துக்களைத்  தழுவி அதை ஒரு எழுத்து வடிவில் கொண்டு வருவதே என் முயற்சி(எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக)

முன்னுரை  :

தொழுகையின் முக்கியத்துவம்:
     
            தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள்.

            தொழுகை தீனின் தூண்
                                                       உமர் (ரலி)

            தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்
                                                                   
                                                                         ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி)

            மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராக அமையவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.
                                                         
                                                                                                    அபூஹுரைரா (ரலி),
                                                                                                    ஸுனன் அபூதாவுத்

 இது போன்ற தொழுகையை வலியுறுத்தும் பிற நபிமொழிகளும் நாம் நன்கு அறிந்த ஒன்றே.

மேலும்  பல சொற்பொழிவுகள்,  புத்தகங்கள்,காட்சிகள்
மூலமாகவும் தொழுகைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் முக்கியத்துவமும் , சிறப்பும் இருக்கின்றது என்றும் அது ஐந்து வேளை கடமையாக்கப் பட்டுள்ளது என்பதும் எல்லா முஸ்லிம்களும் நன்கு அறிந்த ஒன்றே!

ஆனால் இன்று உலகளவில் ஐந்து வேளை தொழுகையை தவராது தொழுபவர்கள் நமக்கு தெரிந்த வகையில் 10% லிருந்து 20% தினர் மட்டுமே.பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையின் போதும் ரமலான் நேரத் தொழுகையின் போதும் நிரம்பி வழியும் கூட்டம் ,கடமையான தொழுகையின் போது காணப்படுவதில்லை, குறிப்பாக ஃபஜ்ர் நேரத்தின் போது ஒரு வரிசை கூட முழுமை அடைவதில்லை.வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் போது மட்டுமே  தொழுகையாளிகளாக இருப்பவர்களும் உண்டு.இளைஞர்களைவிட முதியோர்களே அதிகம் தொழுகையாளிகளாக உள்ளனர்.பள்ளிக்கூடத்திற்காக தமது பிள்ளைகளை எழுப்பும் பெற்றோர்கள், தொழுவதற்காக எழுப்புவதில்லை.

இது ஒரு புறம் இருக்க, தொழுகைக்காக மக்களை அழைக்கும் பணியில் பல மார்க்க அறிஞர்கள் இன்னும் பிற சமூகஆர்வலர்கள் பல வழிமுறைகளைக் கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்துக் கொண்டுத்தான் உள்ளனர் ஆனால் மாற்றம்???

தொழுகைக்கு அழைப்பவர்களைக் கண்டால் புதிய தலைமுறையினர் தப்பித்தால் போதும் என்று ஏன் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்? பிரச்சனை அழைக்கப்படும் முறையில்
இருக்கிறதா? அழைக்கப்படுபவர்களிடத்தில் இருக்கிறதா?

என்பதை ஆய்வு செய்ய நாம் மூன்று காரணங்களை எடுத்துக்கொள்வோம்


ஒன்று :
            நமது நம்பிக்கையில் உறுதியின்மை. நம்மில் பலருக்கு நமது நம்பிக்கைகள் குறித்தும், நமது வழிபாடுகள் குறித்தும், நமது மார்க்கச் சட்டங்கள் குறித்தும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. உறுதியற்ற நம்பிக்கை, தொழுகைக்கு நம்மைத் தூண்டுவதில்லை!


இரண்டு :
           தொழுகையாளிகளின் முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகள். தொழுபவர்கள் முன்மாதிரி முஸ்லிம்களாக விளங்கிடவில்லை. அவர்களில் பலர் வேடதாரிகளாக விளங்குகிறார்கள். (தொழாதவர்களில் பலர் நல்லவர்களாக விளங்குவதும் நிதர்சனமான உண்மையே!).தொழுகையாளியாகிய தந்தை கருணையோடு நடப்பதில்லை, பொய் கூறாமல் இருப்பதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் தொழுகை நம்மிடையே ஒரு வெற்றுச் சடங்காகப் போய் விட்டிருக்கின்றது! அது நமக்குள் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை! தொழுகையாளிகளில் பலர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஒரு மவுனமான வெறுப்பு!


மூன்று  :
           புதிய தலைமுறையினரிடம் கலந்துரையாடுவது எப்படி என்பதை இன்னும் சரிவரக் கற்றுக் கொள்ளாமை. அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பது போல, புளித்துப் போன பேச்சாகப் போய் விட்டது நமது அழைப்பாளர்களின் பேச்சு.மார்க்க சொற்பொழிவாளர்களுக்கும் இந்த 21ஆம் ஆண்டு இளைஞர்களுக்கும் மத்தியில் (intellectual gap)அறிவு சார்ந்த இடைவெளி அதிகமாகிவிட்டது,கல்வி கற்கும் முறை போன்று ஏனைய முறைகளில் மாற்றம் வந்து விட்ட நிலையில் ,தொழுகைக்காக அழைக்கும் முறை மட்டும் மாறாது இருப்பது நாம் சற்று கவனிக்கத்தக்கது.  நமது சொல்லை
கேட்பவரின் மனநிலையைக்கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களின் சந்தேகங்களைப் புரிந்து கொள்ளாமல், பேசுவது என் கடமை என்று பேசுவதால் மட்டும் மாற்றம் வந்து விடாது.

இதை வைத்து நாம் அழைக்கும் முறையிலேயே மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளலாம்
 
                                                                 மாற்றத்தை நோக்கி....




                                                       

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தின் பார்வையில் தலைமைத்துவம்           நாம் இத்தலைப்பின் கீழ் பார்க்கப்போவது ஒரு அரசியல் தலைவரை பற்றியோ அல்லது ஒரு நாட்டு தலைவரை பற்றியோ அல்ல மாறாக புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூலில் பதிவு செய்யப்பட்ட நபிமொழியான, عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏   "‏ أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ‏.                              " ‏ ‏.‏    நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளியாவார் அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் ஆண் தன் குடும்பத்தாரு
சென்ற மாத இதழின் தொடர்ச்சி:             இன்று தொழுகையை பற்றி சில முஸ்லிம்களின் பார்வையானது, வெறும் சடங்காகவே பார்க்கப்படுகின்றது ,சிலர் அறியாமையால் அதை யோகா என்றும் கருதுகின்றனர் இதிலிருந்து நாம் சற்று மாற்றமாக சிந்திக் கடமைப்பட்டுள்ளோம்.             ஹய்யா அலல் ஸலாஹ் ஹைய்யா அலல் ஃபலாஹ்,தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொழியில் கேட்க கூடிய வாசகங்கள் தான்!                                                                                                                        قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏                                                    . ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்(23:1)                                                                                                                      الَّذِيْنَ هُمْ  في صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏  அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(23:2)                இந்த ஆயத்தில் நாம்  اَفْلَحَ  வெற்றி மற்றும் صل