Skip to main content

இஸ்லாத்தின் பார்வையில் தலைமைத்துவம்


          நாம் இத்தலைப்பின் கீழ் பார்க்கப்போவது ஒரு அரசியல் தலைவரை பற்றியோ அல்லது ஒரு நாட்டு தலைவரை பற்றியோ அல்ல மாறாக புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூலில் பதிவு செய்யப்பட்ட நபிமொழியான,


عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ‏.                             "‏ ‏.‏


   நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்
ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளியாவார் அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்
ஆண் தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளி.அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்த விசாரிக்கப்படுவான்
பெண்,தன் கணவனின் வீட்டாருக்கும்,அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள்.அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்
ஒருவரின் பணியாளர் தன் எஜமானின் செல்வத்திற்க்கு பொறுப்பாளி அவன் அது குறித்து விசாரிக்கப் படுவான்
                                                                                                                              - இப்னு உமர்(ரழி)

   ஆக இந்நபிமொழியின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தலைவர்களே ஆவோம் ஆங்கிலத்தில் இதை PERSONAL LEADERSHIP என்று கூறுவார்கள்.இத் தனி மனித தலைமைத்துவ தன்மையின் வரைவிலக்கணத்தின் மிக முக்கியமானது :
தம் கருத்துக்களை ஒருவர் அவர் விருப்பத்தோடு தாமாகவே முன் வந்து பின்பற்ற வைக்கக்கூடிய திறமையாகும் ஆங்கிலத்தில் இதைத்தான் CAPACITY TO INFLUENCE என்பார்கள்
       இதற்க்கு உதாரணம் கூறுவதென்றால் ஒரு தந்தை மகனுக்கு நீச்சல் பயிற்றுவிக்க அவனை நீச்சல் குளத்திற்க்கு அழைத்துச் சென்ற போது அவனை குதி என்றால் அவன் குதிக்க மாட்டான்.இது அவனை தள்ளிவிடுவது (push)போன்றதாகும்,இதுவே அந்த தந்தை முதலில் நீச்சல் குளத்தில் இறங்கி,பிறகு தம் மகனை குதிக்க  சொல்வது (pull) போன்றதாகும்.இது அவனை நம்பிக்கையோடு செயல்பட வைக்கும்.
 இஸ்லாமிய வரலாற்றுரீதியாக பார்த்தால் அண்ணல் பெருமானார்(ஸல்)அவர்கள் தமது நபித்துவத்திற்க்கு முன்பே குறைஷிகளால்"அல் அமீன்"நம்பிக்கையாளர் "அஸ்ஸாதிக்"
உண்மையாளர் என்று அழைக்கப்பட்டார்கள்.பிறகு தமது நபித்துவத்தின் ஆரம்பத்தில் ஹிரா குகையில் நடந்த ஓர் அதிசய காட்சியை கூறி அதை அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்கள் ஏற்றது ,தம் நண்பர் அபூபக்கர் (ரழி) அவர்களை தாம் கூறியது அனைத்தும் உண்மை என்று ஏற்க்கவைத்தது.பிறகு நபியே!உம் நெருங்கிய உறவினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்!என்ற வஹி வந்த பிறகு தமது குடும்பத்தார்களை
ஒன்றுக்கூட்டி "உங்களுள் யார் எனது இப்புனிதப் பணிக்கு உதவியாளராக இருப்பீர்கள்?"என்று கேட்ட போது 10 வயது சிறுவனான அலீ(ரழி) அவர்கள் "நான்
இருக்கேன் நாயகமே என்று கூறியது ,நபி(ஸல்)அவர்களை முன் பின் தெரியாத மதீனாவாசிகளை 'அகபா'என்னும் உடன்படிக்கை போட வைத்தது.தமக்கெதிறாக வாளேந்திய உமர்(ரழி)வை தாம் இறந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்'என்று கூறுவோரை வெட்டுவதற்காக வாளேந்தவைத்தது.
         இது போன்ற அனைத்து சம்பவங்களை வைத்து பார்க்கும் போது  நபி(ஸல்) அவர்கள் அனைத்து விதமான மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது
 அடுத்ததாக தலைமைத்துவத்தின் அடையாளம் பொறுப்புணர்வாகும்.தலைமைத்துவம் என்பதை சுருக்கமாக விளக்க விரும்பினால்  அதனை "பொறுப்பு RESPONSIBILITY என்ற ஒரே சொல்லின் மூலம் விளக்கி விடலாம் "என்னை தலைவராக்குங்கள் நான் பொறுப்பேற்க்க மாட்டேன் என்றால் அது தலைமைத்துவம் ஆகாது மாறாக பொறுப்பேற்றாலே தலைமைத்துவம் வந்துவிடும்
          ஒரு பொறுப்பை தாமாகவே முன்வந்து ஏறுக்கொள்ளும் உணர்வைத்தான் ஆங்கிலத்தில் PROACTIVE RESPONSE என்பார்கள் இப்படிப்பட்ட பொறுப்புணர்வை தூண்டக்கூடிய ஹதீஸ்
 ஒன்றை நாம் ஆய்வு செய்வோம்


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً  فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ
இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைளாகும் அதில் சிறப்பானது அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை என்பதாகும்.அதில் தாழ்ந்து பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவதுடன் இன்னும் நாணமும் இறைநம்பிக்கையின் ஓரு பகுதியாகும்
                                                                                                                     -அபூஹுரைரா (ரழி)
                                 
                  இதில் ஆய்வுக்குரியது யாதெனில் தான் போகும் பாதையில் கல்லோ முள்ளோ கிடந்தால் அதை பொறுப்பிள்ளாதவன் பிறர் மீது குறையைக் கூறி விட்டு கடந்து செல்வான் ,அதுவே பொறுப்புள்ளவனோ அதை அகற்றி விட்டு செல்வான்.இதைத்தான் ஆங்கிலத்தில் INITIATIVE என்பார்கள்
      இப்போது "உங்களில்  ஒவ்வொருவரும் பொறுப்பாளியே" என்ற நபிமொழியையும்"இறைநம்பிக்கையின் கிளைகள்"என்ற நபிமொழியையும் இணைத்து பார்க்க கும் போது "பொறுப்புணர்வை தருவது இறைநம்பிக்கைத்தான் "என்பது அறிய முடிகிறது.
எனவே இஸ்லாத்தை பொறுத்தவரை

                   

                              தலைமைத்துவம்

 
                      பொறுப்புணர்வு.                                                        இறைநம்பிக்கை

இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதாகும்.

இந்த பொறுப்புணர்வுக்கு உதாரணமாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்  கொள்ளலாம்.
                    நபி(ஸல்) அவர்களும் மற்ற நபித்தோழர்களும் மதினாவில் போர் நிகழ்ந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்கியிருந்த போது ஒரு நாள் காலையில் திடீரென ஒரு சப்தம் கேட்டது நபித்தோழர்கள் என்ன நடந்தது என்பதை அறிய கிளம்பியபோது,நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு முன்னரே குதிரையில் மதினாவை சுற்றி வளம் வந்து விட்டு நபித்தோழர்களிடம் "நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை"என்று கூறி அவர்களின் அச்சத்தை போக்கினார்கள்.இதுவே பொறுப்புணர்வாகும்
                         பொறுப்புணர்வு  உள்ளவர்கள் தாம் இருக்கும் இடத்தை முன்னால் இருந்ததை விட சிறந்த இடமாக மாற்றுவார்கள்.நபி (ஸல்) அவர்கள் மதினாவை சிறந்த இடமாக மாற்றினார்கள்.
                           அடுத்ததாக கலீஃபாக்கள் வாழ்க்கையிலிருந்து உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம்,அபூபக்கர் (ரழி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மதினாவே மகிழ்ச்சியில் தி வைத்தது ஆனால் கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்களுடைய வீட்டினருகில் வாழ்ந்து வந்த இரு சிறுமிகள் அந்த மகிழ்ச்சியில் பங்கு பெறவில்லை காரணம்,அபூபக்கர்(ரழி) அந்த சிறுமிகளுக்கு பால் கறந்து  கொடுப்பது வழக்கம், ஆனால் அவர்கள் கலீஃபாவாக ஆனப்பிறகும் அவ்வாற
 பால் கறந்து கொடுப்பார்களா என்ற அச்ச உணர்வே ஆகும் இந்த தகவல் கலீஃபாவின் காதுகளுக்கு என்கிறபோது,அபூபக்கர்  (ரழி)அவர்களே அந்த சிறுமிகளிடம் சென்று "இறைவனின் அருளால் எனது பதவி,எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நான் நம்புகிறேன்.நான் நிச்சயமாக உங்களுக்குப் பால் கறந்து கொடுப்பேன்" என்றார்கள்.அதன் பின்னர் அந்த வழியாக அவர்கள் செல்லும்போதெல்லாம் அச்சிறுமிகளிடம் "உங்கள் ஆடுகளுக்கு பால் கறக்க வேண்டுமா?என்று கேட்பது வழக்கமாக இருந்ததது
                       மற்றொரு  சம்பவம்,போரில் தன் ஒரே ஒரு மகனையும் இழந்து விட்டு மதினாவுக்கு அருகில் ஓர் மூதாட்டி வசித்து வருவது கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்களின் கவனத்திற்க்கு வந்ததும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து,அதி காலையில் அந்த மூதாட்டி வீட்டிற்கு சென்று அதனை சுத்தம் செய்து,அவருக்கு உணவு பொருட்கள் வழங்கிவிட்டி வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.இந்நிலையில் அந்த மூதாட்டி பற்றிய செய்தி உமர்(ரழி) அவர்களுக்கு எட்டியது ஒரு நாள் விடியற்காலையில் அங்கு சென்று பார்த்தபோது அந்த மூதாட்டியின் தேவைகள் முன்னரே நிறைவேற்றப்பட்டிருப்பது தெரிய வருகிறது.மறுநாள் அந்த வேலை யாரால் செய்யப்படுகிறது என்பதை அறிய சற்று முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமர் (ரழி)
அவர்கள் அந்த குடிலில் பின்புறம் மறைந்து கவனித்த
போது,அது கலீஃபா அபூபக்கர் (ரழி)அவர்கள் தான் என்பதை அறிந்ததும் வியந்தார்கள்
                      கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், கலீஃபா அவர்ஙள் குடிமக்களின்
 நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்வது வழக்கம்.அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது,நிவாரண உதவித்தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர்(ரழி) அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.ஒரு நாள் இரவு நேரத்தில் கலீஃபா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.ஒரு நாள் இரவு நேரத்தில் கலீஃபா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.ஒரு நாள் இரவு நேரத்தில் கலீஃபா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.ஒரு நாள் இரவு நேரத்தில் கலீஃபா அவர்கள் தம் உதவியாளர்களை அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுக்குரலும் வரக் கண்டார்கள்.கலீஃபா அவர்கள் அந்த குடிசையை நெருங்கிய போது,அங்கே ஓர் பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த போது ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளிருந்து அழுக்குரலும் வரக் கண்டார்கள்,கலீஃபா அவர்கள் அந்த குடிசையை நெருங்கிய போது,அங்கே ஓர் பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்து கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்,உடனே அப்பெண்மணிக்கு ஸலாம் கூறி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றார்கள்,அப்பெண்மணி உமர்(ரழி)அவர்களை முன்னால் பார்த்திராததால் அவர்களை அடையாளம் தெரியவில்லை
 உமர்(ரழி)       : குழந்தைகள் ஏன் அழுகிறார்கள்?
பெண்மணி.   : பசியின் காரணத்தினால்தான்
உமர்(ரழி)        : அடுப்பில் என்ன இருக்கிறது?
பெண்மணி. : அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான்.அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்பிலேயே அவர்கள் தூங்கிவிடுவார்கள் அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறேன்.இந்த துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவிக்கூட செய்யாத கலீஃபா உமர் அவர்களுக்கும் எனக்கும் இறுதித் தீர்ப்பு நாளன்று  அல்ஸாஹ் தீர்ப்பு வழங்குவான்.
                  அப்பெண்மணியின் இந்த வார்த்தையை கேட்டு பதறிப்போன கலீஃபா உமர்(ரழி) அவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்திட அல்லாஹ் உம்மீது கிருபை செய்வானாக!உனது துண்பமான நிலையை உமர் எவ்வாறு அறிவார் ? என வினவினார்
                            உடனே அந்த பெண்,முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா?என்றார்
                                     கலீஃபா உமர்(ரழி) அவர்கள் விரைந்து நகருக்கு திரும்பி உடனே பைத்துல் மாலிற்க்கு சென்றார்கள்,ஒரு சாக்கு பையில் மாவு,நெய்,பேரித்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும்,துணிமணிகளையும் கொஞ்சம் டணமும் எடுத்துக்கொண்டு சாக்கு பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து அதை தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்,அதை தாமே தூக்கி வருவதாக உதவியாளர் சொன்னபோது,உமர் (ரழி) அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா?மறுமையில் அந்த பெண்மணியைப் பற்றிய கேள்வி என்னிடமே கேட்கப்படும் அதனால்,இந்த சுமையை நானே தூக்கு கிறேன் என்றார்கள்   
                                  உடனே அதை சுமந்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த பெண்மனியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள்   
குடிசையை அடைந்த உமர் (ரழி) அவர்கள் மாவு,நெய்,பேரித்தம் பழம் இவை  மூன்றையும்
எடுத்து அவற்றை பிசைந்து அடுப்பிலிருந்த சட்டியில் இட்டு கிளறினார்கள் அருகிலிருந்து ஊதுக் குழலை
எடுத்து ஊதி அடுப்புத்துதீயைத்தூண்டி எரியச்செய்தார்கள்,இதனால் அவர்களுடைய அடர்ந்த ராணிக்கும் புகை படிந்தது
                                    சிறிது நேரத்திற்கு பிறகு உணவு தயாரானதும் கலீஃபா அவர்களே,அந்த உணவை அந்த பெண்மணிக்கும்,குழந்தைகளுக்கும் பரிமாறனார்கள்
 ,மீதம் இருந்ததை அடுத்த வேளை உணவிற்க்கு வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தார்கள்
                                     வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதை கண்ட கலீஃபாவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.பிறகு உமர் (ரழி)அவர்கள் அப்பெண்மணியிடம் அக்குழந்தையைப் பராமரிப்பவர் யாருமில்லையா என வினவினார்கள்,அந்த குழந்தைகளின் தந்தை இறந்துவிட்டதாகவும் அவருக்கு ஆதரவளிக்க வேறுயாருமில்லை எனவும் அப்பெண்மணி தெர்வித்தார்கள்.
                                      வீட்டில் இருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துபோய் மூன்று நாட்கள் பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்த பெண்மணி சொன்னார் ,உங்கள் இந்த கருணை செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!உண்மையில் கலீஃபா ஆவதற்கு உமரை விட  நீங்களே மிக பொருத்தமானவர் என்றார்கள்.உமர்(ரழி)அவர்கள்,நீர் கலீஃபாவை சந்திக்கும் போது அங்கே என்னை கண்டுக்கொள்வீர்கள்"என்று கூறினார்கள்.
                                                        கொஞ்சம் நேரம் அங்கேயே அமர்ந்துக்கொண்டு குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உணர் (ரழி) அதன் பின் மதினா  திரும்பினார்கள்.செல்லும் வழியில் அஸ்லமிடம்  சொன்னார்கள்,நான் அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்து அழும் குழந்தைகள் சிர்த்து விளையாடிக் கொண்டிருந்து பார்பதற்காகத்தான்.
                                       வீரத்திற்கு பெயர் போன உமர்(ரழி)அவர்கள் கருணை உள்ளவராகவும் தமது குடிமக்களின் மீது பொறுப்புணர்வு  கொண்டவர்கள்களாகவும் திகழ்ந்தார்கள்
                  தானாகவே முன்வந்து ஓர் நற்செயலை செய்யாததால் ஏற்பட்ட பலனை குறிக்க ஒரு சிறுக்கதை
         ஒர் ஊரின் கடற்கரையின் ஓரமாக ஒருவர் அதிகாலையில் நடந்துக் கொண்டிருந்த போது தூரத்தில் ஓர் சிறிய உருவம் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த ஓர் காட்சியை கண்டார்,பிறகு அருகே சென்று பார்த்தபோது ஓர் சிறுவன் கடல் அலையில் அடிக்கப்பட்டு கரையில் வந்து விழும் ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அதை கடலில் போட்டுக் கொண்டிருந்தான்.இதை பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த நபர் அந்த சிறுவனிடம் "எவ்வளவோ மீன்கள் செத்துக்கிடக்க நீ ஒவ்வொன்றாக எடுத்துக் கடலில் போடுவதால் என்ன ஏற்பட்டுவிடும்?என்று கேட்டார்,அதற்க்கு அந்த சிறுவன் மீண்டும் ஒரு மீனை எடுத்து இந்த ஓர் மீன் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறி கடலில் வீசினான்.இதை அறிந்துக் கொண்ட அந்த நபரும் தாமும் அந்த சிறுவனுடன் அந்த வேலையைச் செய்ய தொடங்கினார்
                            பொறுப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக முகநூலில் பதிவான ஓர் செய்தி, இளநீர் வியாபாரியான ஒருவர் பொதுவாக இரண்டு துண்டுகளாக வெட்டிப் போடப்படும் இளநீர் மட்டையை நான்கு துண்டுகளாக வெட்டிப் போட்டதை கண்ட ஒருவர்,அவரிடம் இதற்கான காரணம் கேட்க அந்த வியாபாரி "இப்பொழுது மழைக்காலம் வருவதால் தேங்கி நிற்கும் தண்ணீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் பல நோய்கள் உருவாகுகின்றது என்று கூறுகின்றனர்.இந்த மட்டையை நான் இரண்டாக வெட்டிப்போட்டால் தண்ணீர் அதில் தேங்கிநிற்க்கும் அதை தடுப்பதற்காகத்தான் நான் நாங் துண்டுகளாக வெட்டிப் போடுகிறேன்"என்றார் இதுவே தலைமைத்துவம்.
                                     பொறுப்புணர்வின் அடுத்த வெளிப்பாடு ஒர் தலைவன் தான் எடுகின்ற முயற்ச்சியில் தோல்வி அடைந்து விட்டால் அத்தோல்விக்கு தாமேபொறுப்பேற்றுக் கொள்வது.இதையே ஆங்கிலத்தில் PERSONAL RESPONSIBILITY என்பார்கள்.அதற்கு உதாரணமாக,
                                                வெற்றிக்கு காரணமான ஒரு கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் அவரது வெற்றிக்கு காரணம் என்னவென்று அஹரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள்,வென்றார்கள் என்பேன்.ஆனால் அதுவே அவர்கள் தோல்வி  அடைந்தால் அதற்கு நானே பொற்ப்பேற்றுக் கொள்வேன் என்றார்கள்
                            அமேரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான ரொனால்டு ரேகன் RONALD REGAN க்கு கீழே பணிபுரியும் பணியாளர் காலின் பவர்டு COLIN POWELL  என்பவர் ஒரு project-ஐ எடுத்து வந்து ரொனால்டு ரேகனிடம் காட்டினார்,அவர் அதை பார்த்து விட்டு "இது சரியாக வரும் என்று எனக்கு தோன்றவில்லை" என்றார்.ஆனால் காலின் பாவர்டு சில விஷயங்களை எடுத்துக் கூறி ரொனால்டு ரேகனை ஏற்கச் செய்தார் ,உடனே ரொனால்டு ரேகன் "நீர் சரி என்று நினைத்தால் நாம் போவோம் "என்றார்.
இதில் அவர் "நாம் போவோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.பிறகு அவர்கள் சென்றார்கள் ஆனால் காரியம் தோல்வியில் முடிந்தது.மீடியாக்கள் அனைத்தும் கு விருது கேள்வி எழுப்பினர் அதற்கு ரொனால்டு ரேகன் பதில் கூற வேண்டும் அவர் கூறினார்"நானே இதற்க்கு பொறுப்பேற்று கொள்கிறேன் "என்றார்.இதை பார்த்த காலின் பாவர்டு கண்ணீருடன்"நான் இவருக்காக எதையும் செய்வேன்"என்று கூறினார்.
                           ஆக தோல்விக்கு ஓர் தலைவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவனுக்கு கீழ் உள்ளவர்கள் அவனை அதிகம்  பின்பற்றவே ஆசைப்படுவார்கள்,ஆனால் இன்று தோல்விகளுக்கும் பிரட்சனைகளுக்கும் பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு
                           கண்ணாமூச்சி விளையாட்டின் போது கதவு திறந்திருந்த ஒரு லிஃப்டில் ஒளிந்து கொள்ள ஒரு சிறுமி பெட்டியில் காலடிவைக்க,அங்கே அந்த பெட்டி இல்லாததால் கீழே விழுந்து இறந்தாள்,காரணம் நீண்ட நாட்களாக சரி செய்யப்படாத ஒரு எந்திரக் கோளாறு
இதற்க்கு யார் பொறும்பாளி???
                                அடுத்ததாக ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமானஎண்ணம், "நாம் நம் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவோம்"என்பதுதான்.இதையே ஆங்கிலத்தில்  ACCOUNTABILITY என்பார்கள்.
                        இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும்  பெண்சிசுக்  கொலைகளுக்கு காரணம்,"நாம் யாரிடமும் பதில்  சொல்ல  வேண்டியதில்லை என்ற  எண்ணம்  தான்  என்று  ஓர் அறிஞர்  கூறுகிறார்.
                   ஆனால் ஓர் இறைநம்பிக்கையாளனை பொறுத்தவரை "அவன் அல்லாஹ் விடம் பதில் கூறியே ஆக வேண்டும் "என்ற எண்ணம் வேண்டும்.
                     ஸஹாபாக்கள் தைலமைப்பொறுப்பில் இருந்த போது மக்களிடம் 'தாம் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும் எ
                              அடுத்ததாக  நாம்  பார்க்கவிருப்பது ஓர் தனிமனிதனுக்குன்று அச்சப்பட்டு,தம் செயல்களை கவனிக்குமாறு 'கூறினார்கள்.   தேவையான அதிலும் குறிப்பாக ஒரு தலைவனுக்கு தேவையான ஆளுமைத் திறனாகும் இதையே ஆங்கிலத்தில்  PERSONALITY என்பார்கள்
                              இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இந்த ஆளுமைப் பண்பை ஐந்து வகையாக பிரிக்கலாம்
1.SPIRITUALITY
2.INTELLECT
3.IMPULSE CONTROL
4.PHYSICAL  STRENGTH
5.CHARACTER

                         முதலாவதாக ஆன்மீகம் SPIRITUALITY

ஓர் தலைவன் ஆன்மீகரீதியாக எப்படி இருக்க வேண்டும்  என்பதை அல்குர்ஆன் (ஸுரதுல் தவ்பா:18)(9:18)ஆயத்தில் அல்லாஹ்  இவ்வாறு  கூறுகிறான்

        اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

       அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.   
                     அச்சம் என்ற பொருளுக்கு மூலத்தில் இருக்கக்கூடிய வார்த்தை يخش வாகும்,இதே அச்சம் என்ற பொருளுடைய மற்றொரு அரபி வார்த்தை خوف என்பதாகும்,இதற்கிடையில் உள்ள வித்தியாசமாவது யாதெனில்,يخش என்றால் அல்லாஹ்வைப்பற்றி,அவனுடைய தன்மைகளைப் பற்றி அறிந்து அஞ்சுவதாகும் خوف என்பது அறியாமயே  வரும் பயமாகும்.
                          ஆக அல்லாஹ்வை அஞ்சவேண்டுமென்றால்,அவனைப்பற்றி அறிய வேண்டியது அவசியம்.அதன் மூலமாகவே இறைவனை மரியாதைக்குரிய அச்சத்தோடு அஞ்சுவதும் அதற்கேற்றவாறு நம் செயலை மாற்றிக் கொள்ளவும் உதவும்"என் இறைவன் என்னைப் பார்கின்றான் அவன் முன் நான் இப்படி செய்யலாமா?"என்ற எண்ணத்தோடு நாம் ஓரு செயலை செய்தால் அது கண்டிப்பாக சிறப்பான செயலாகவே அமையும்,இதுவே ஆளுமையை வளர்க்கக்குடிய மிக முக்கியமான பண்பாகும்.மேலும் அதே ஆயத்தில் இதுவே நேர்வழி என்று இறைவன் கூறியிருக்க அவர்கள் பிறருக்கு உதாரணமாக இருக்ககுகூடியவர்கள் என்று அறிய முடிகிறது.
            ஆளுமைப் பண்பில் இரண்டாவது அறிவு INTELLECT பார்க்க ஸூரதுல் பகரா:247 (2:247)
 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ 


அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
                      இந்த ஆயத்தில் உள்ள சம்பவம் நபி (ஸல்)அவர்களின் காலத்துக்கு முன்னால்,இஸ்ரவேஸர்கள் தவ்ராத் வேதத்தை புறக்கணித்து  அல்லாஹ்வுக்ககு மாறு செய்தனர் இந்நிலையில் அமாலிக்கா கோத்திரத்தினர் கொடுமை மிக்க தலைவனான ஜாலூத் என்பவன் இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினான்.ஜாலூத்தின் கொடுமைக்கு ஆளான இஸ்ரவேலர்கள் அக்காலத்தில் நபியாக இருந்த ஹள்ரத் ஷம்வீல் (அலை) அவர்களிடம் தங்களுக்கு தலைவர் ஒருவரை ஏற்படுத்தி தருமாறு அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டுமென்றும்,ஆதலால் அவர் தலைமையில் ஜாலூத்தை எதிர்த்து வெற்றி கொள்ளலாம் என்று கூறினர்.ஷம்வீல்(அலை)அவர்களுடைய துஆவை ஏற்று அல்லாஹ் தாலூத்தை தலைவராக்கினான்.ஆனால் இஸ்ரவேலர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் தாலூத் தகுதியற்றவர் என்று  கூறியதும் அறிவும் உடல்பலமும் உள்ளதே அவர் தலைமைப் பொறுபிபிற்க்கு தகுதியானவர் என்று அவர்களுடைய நபி கூறியதே மேற்கொண்ட ஆயத்தாகும்.
            பண்டிதர்கள் "ஓருவர் மற்றொருவர் மீது தாக்கம் செலுத்தி நிலையான பலனை பெற தமது அதிகாரத்தை (power)அல்லது உணர்ச்சிகளை(emotions)பயன்படுத்தி பெறுவதை விட அறிவுப் பூர்வமாக ஏற்படுத்தப்படும் தாக்கமே நிலையான பயனைத் தரும்" என்று கூறுகின்றனர்  
                        அமேரிக்காவிலுள்ள இஸ்லாமிய உளவியல் அறிஞர்,மேலும் அங்குள்ள ZAITUNA COLLEGE ன் துணை நிறுவனறுமான HAMZA YUSUF அவர்கள் " ஒரு நாட்டில் நடைப்பெறும் தீமையான செயலைத் தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அறிவூட்டினாலே போதும் அவர்களுக்கு காவலர்களோ கண்காணிப்பாளர்களோ தேவையில்லை"என்று கூறுகிறார்.மேலும் ஒருவர் மற்றொருவர் மீது தாக்கத்தை ஏற்படுத்த TRIVIUM என்னும் மூன்று திறன்கள் தேவை என்று கூறுகிறார் 
அவை: 1) இலக்கணத்திறன் (GRAMMAR)
               2)தர்க்கம்(LOGIC)
               3)சொல்லாட்சி( RHETORIC)
இம்மூன்று திறன்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்கள் என்பதில் மாற்று கறுத்து  இல்லை
✔நபி(ஸல்)அவர்களுக்கு தர்க்க திறன் இருந்ததற்கான சம்பவம்
அல்லாஹ்வையன்றி தங்கி பாதிரிமார்களையும் சந்நியாசிகளையும்,மர்யமுடைய மகன் மஸீஹையும் கடவுளாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்...என்ற ஸூரதுல் தவ்பாவிலுள்ள 31 ஆயுத இறங்கியபோது முன்பு கிறுஸ்துவராக இருந்த அதி இப்னு ஹாதிம் என்ற ஸஹாபி  நபிகளாரிடம் வருகைத்தந்து மேற்கூறிய ஆர்த்தி விளக்கத்தை கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் அறிஞர்களும் துறவிகளும் எதைனை ஆகுமானது என்று கூறினார்களோ அதை ஆகுமானதென்றும் எதை விட்டு தடுத்தார்களோ அத தடை செய்யப்பட்டது என்று ஏற்றுக் கொண்டதே அவர்கள கடவுளாக ஏற்றுக் கொண்டதuற்க்கு சம்ம என்று பதிலளித்தார்கள்
✔நபி(ஸல்)அவர்களுக்கு சொல்லாட்ச்சி திறன் இருந்ததற்கான சம்பவம்
நபி (ஸல்) அவர்கள்" இறைவன் எனக்கு பல விஷயங்களை ஒன்று சேர்த்து கூறும் ஆற்றலை தந்துள்ளான்"என்று கூறியுள்ளார்கள்
✔மேலும் இலக்கணத்தை பொறுத்த வரையில் அல்குர்ஆன் அரபி இலக்கணத்தின் பிறப்பிடமாக திகழ்கிறது,நண்ப (ஸல்)அவர்களுடுய பேச்சிலும் எந்த குறையும் கண்டிட  இயலாது.
                       ஆளுமைப் பண்பில் மூன்றாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனாகும் IMPULSE CONTROL
ஸூரதுஸ்ஸஜதா:24 (32:24)


وَ جَعَلْنَا مِنْهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا ؕ وَ كَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ‏ 
 இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.
                                  இந்த ஆயத்தின் மூலம் தெரிகிறது அல்லாஹ் அவர்களின் பொறுமையின் காரணமாகவே தலைமைப் பொறுப்பை கொடுத்தான் என்று.  
                                               நபி (ஸல்)அவர்களும் பல இடங்களில் பொறுமையோடு செயல்பட்டுள்ளாராகள் அதில் குறுப்பிட தக்கது தாயிஃப் நகரத்தில அவர்கள் மேற்கொண்ட பொறுமை
                               ஆளுமை பண்பில் நான்காவது உடல் வலிமையாகும் PHYSICAL STRENGTH
                         மத்யன் நகரத்தை நோக்கி மூஸா(அலை)அவர்கள் சென்ற போது அங்கிருந்த மக்களின் ஓர் கூட்டத்தினர் கிணற்றிலிருந்து தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததால் இரண்டு பெண்கள் தங்கள் கால்நடைகளோடு இருந்ததை கண்டு காரணம் கேட்டு அந்த கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார்கள்.நடந்த இந்த சம்பவத்தை தங்கள் தந்தையிடம் கூறினார்கள் பிறகு அவர்வகளுடைய தந்தை அவர்களை வீட்டுக்கு அழைத்து வரக்கூறவே அப் பெணளில் ஒருவர் தம் தந்தையிடம் இவ்வாறு கூறினார்கள்.ஸூரதுல் கஸஸ்:26 (28:26)
قَالَتْ اِحْدٰٮہُمَا يٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ‌
اِنَّ  خَيْرَ مَنِ اسْتَـاْجَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ‏ 
..என் தந்தையே நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திககொள்ளுங்கள்.நீங்கள் கூலிக்கு அமர்ததுவர்களிலேயே மிகச்சிறந்த பலமிக்கவர்,நம்பிக்கைக்குரியவர் ஆவார்
இதில் கவனிக்க வேண்டிய வார்த்தை القوى பலமிக்கவர் ஆகும்.
            ஆளுமைப் பண்பில் ஐந்தாவது ஒருவருடைய பண்புகூறுகள் CHARACTER
நபி(ஸல்)அவர்களைப் பற்றி அல்லாஹ் கூற்கிறான் ஸூரதுல் கலம்:4 (68:4)


وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِ

நீர் மகத்தான குணத்தில் இருக்கின்றீர்
       நற்குணம் உள்ளவருக்கே தலைமைத்துவ பதவி(ஸூரதுல் பகரா:124)
(2:124)

إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِىۖ قَالَ لَا يَنَالُ عَهْدِى ٱلظَّٰلِمِينَ 
நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு தலைவராக ஆக்கிவிட்டேன் என்று கூறினான்.அதற்கு என்னுடைய சந்ததிகளையும் ஆக்குவாயாக!என்று கேட்டார்,அதற்கு அல்லாஹ் "அத்தியாயக்காரரை என்னுடைய உறுதிமொழி சேராது"எனக் கூறினார்
   இப்ராஹீம் (அலை)அவர்களின் துஆவிற்கு அல்லாஹ் கொடுத்த பதில்
              அடுத்ததாக  ஒரு தலைவனுக்கு தேவையானது ஒருவரது ஆளுமையின் பகுதியாக  அமையும் கூறு என்று கூறப்படும் TRAITS ஆகும் 
             இதை பண்டிதர்கள் 10 வகையாக பிடித்துள்ளனர்
1)ARTICULATION
2)LISTENING AND INSIGHT
3)SELF CONFIDENCE
4)SELF ASSURANACE
5)PERSISTANCE
6)DETERMINATION
7)TRUST WORTHY
8)DEPENDABLE
9)KIND AND FRIENDLY
10)OUTGOING

ARTICULATION:
                தமது கருத்தை தெளிவாகப் பேசும் திறனாகும்
நபி(ஸல்)அவர்கள் பேசும் போது வார்தைகளை எண்ணிவிட முடியும்

LISTENING AND INSIGHT:
              மற்றவர் சொல்ல வருவதை கவனத்தோடு கேட்டல் மற்றும் புறிந்துக்கொள்ளுதல்
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் பேசினால் அவர்களது முழு உடலையும் அவரின் பக்கம்  திருப்பிவிடுவார்கள்

SELF CONFIDENCE:
                தன் மீதும் தன் கூற்றின் மீதும் உறுதி 
அபூபக்கர்  (ரழி)அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் உமர்(ரழி)அவர்கள் அல்குர்ஆன் தொகுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்

SELF ASSURANCE:
              தன் கூற்றை சந்நேகமில்லாமல் கூறுவது 
மேற்கூறப்பட்ட சம்பவம் ஒரு உதாரணம்
அல்லாஹ் அல்குர்ஆனைப் பற்றி ஸூரதுல் கஹஃபு:2 (18:2)
قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا
இது உறுதியான அடிப்படையின் மீது உள்ளது

PERSISTENCE:
             ஒன்றில் உறதியாக இருப்பது தொடர்ந்து முயற்சிப்பது 
ஏகத்துவத்தை பறப்புவதில் பல இன்னல்கள் வந்தாலும்,நபி(ஸல்) அவர்கள்:எனது வலதுக்கையில் சூரியனையும் இடக்கையில் சந்திரனை கொடுத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கி செய்யும் வரை அல்லது நான் அழியும் வரை இதை விட மாட்டேன் என்றார்கள்

DETERMINATION:
                ஒரு செயலை செய்வதில் சிரமங்கள்வந்தாலும் அதில் தொடர்ந்து உறுதியுடன் முயற்ச்சிப்பது 
மேற்கூறியஉதாரணம் இதற்க்கு பொருந்தும்

TRUST WORTHY:
               நம்பிக்கைக்குறியவராய் நடந்துக்கொள்வது
நபி(ஸல்) அவர்களை குறைஷிகள் நபியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை உண்மையாளர் என்றும் நம்பிக்கைக்குறியவர் என்றே அழைத்தார்கள்
பல நாடுகளில் 25 ஆண்டுகளில் 2,00,000மக்களிடம் ஆய்வு செய்யும் விதமாக "ஒரு தலைஹன் எவ்வாறு இருக்க வேண்டும் "என்று கேள்வி கேட்கப்பட்டோது அதிகமான மக்கள் கூறிய பதில் "ஒரு தலைவன் உண்மையாளராகவும் நேர்மையாளராகவும் இருக்க வேண்படும் என்பதே ஆகும்

DEPENDABLE:
             மற்றவர் மீது சார்த்திருப்பது
நபி(ஸல்)அவர்கள் அழைப்பு பணிக்காக ஸஹாபாக்களின் உதவியை நாடினார்கள்
உமர்(ரழி)அவர்கள் கலீஃபாவாக இருந்த போது "அ லீ இல்லாவிட்டால் உமர் என்றைக்கோ அழிந்திருப்பார் "என்று கூறியுள்ளார்கள்
KIND AND FRIENDLY:
           இரக்க உணர்வு மற்றும் நட்புப்பாராட்டுதல் 
ஸூரதுல் அன்பியா :107)(21:107)

وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا رَحْمَةً لِّلْعَٰلَمِينَ 

உங்களை உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அன்றி நாம் அனுப்பவில்லை

OUTGOING:
            மற்றவோடு சுலபமாக பழகும் திறன் மற்றும் மாற்று மற்றவரை நம்மோடு சுலபமாக பழக அனுமதிக்கும் திறன்
ஓர் முஃமீன் அடுத்தவரோடு சுலபமாக பழகியது,மற்ற வரை அவனோடு சுலபமாக பலகை அனுமதி திருவான் (நபி மொழி)
   அடுத்ததாக ஒரு தலைவனுக்கு தேவையானது திறமை SKILLS ஆகும் இதை அரபி மொழியில் حكمة என்று கூறுவர்
திறமைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்
1)உழைப்பபுத்திறன் 
TECHNICAL SKILL
2)மற்றவரோடு பழகும் திறன்
HUMAN RESOURCE SKILL
3)சிந்தனைத்திறன்
CONCEPTUAL SKILL
அல்குர்ஆனில் திறமைக்கான உதாரணம்
ஸூரதுல் கஹஃப்:94-97(18:94-97)

قَالُوا۟ يَٰذَا ٱلْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰٓ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا 
அவர்கள் துல்கர்னைனே!நிச்சயமாக யஜுஜும் மஜுஜும் பூமியில் பெரும் குழப்பவாதிகளாக இருக்கிறார்கள்,எங்களுக்கு அவர்களுக்குமிடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்துவதற்காக ஒரு தொகையை உமக்காக நாங்கள் ஆக்கித்தரலாமா?என்று கேட்டார்கள்(18:94)
 قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ‏ 
 அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.(18:95)
 اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌ ؕ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌ ؕ حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ؕ‏ 
 “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).(18:96)
فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏ 
எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.(18:97)
                                             இவ்வாயத்துகளளை வைத்து பார்த்தால் துல்கர்னைன் என்ற நல்லடியார்க்கு சரிந்தனத்திறனும் உழைப்புத்திறனும் இருந்தது என்றும் அவரைச் சூழ்ந்திர்ந்த மக்களுக்கு உழைப்புத்திறன் இருந்தது என்றும் அறிய முடிகிறது 
                              மேலும் இதிலிருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு படிப்பினை,மற்றவருடைய திறனையும் பயன்படித்திக்ஙொள்ளலாம் என்பதாகும்
 இதற்கான மற்றொரு உதாரணம்:
                 மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமானப்பணிகள்  நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எமனிலிருந்து ஒரு நபர் வந்து அதற்கு தேவையான கற்களை செய்தும் அதை அவரே தூக்கி வைத்துக்கொண்டும் இருந்ததை கண்டு நபி(ஸல்)சஹாபாக்களை கற்களை தூக்கிக்கொண்டு  செல்லும் பணியைச் செய்ய சொன்னார்கள்
                  இந்த திறனை வளர்த்துக் கொள்ள நமக்கு  பயிற்ச்சி தேவை பயிற்ச்சியின் அவசியத்தை கற்றுத் தருவது 5நேரத் தொழுகையே ஆகும்
                   அடுத்ததாக ஒரு தலைவனுக்கு தேவையானது SITUATIONAL APPROACH என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஓர் சூழ்நிலையை எவ்வாறு  கையாழ்வது என்பதை தெரிந்துகொள்ளுதல் ஆகும்
                ஓரு சூழ்நிலையில் நாம் எவ்வாறு  செயல்பட வேண்டும்  என்று தெரிந்து   செயல்பட்டால் அது ENGINEERING THE SITUATION  என்று ஆங்கிலத்தில் கூறப்படும் அவ்வாறு இல்லாமல்  ஓரு சூழ்நிலை நம்மைச் செயலிழக்கச் செய்தால் அது நம்மை சூழ்நிலை கைதியாக மாற்றிவிடும் இதை ஆங்கிலத்தில் VICTIM OF THE SITUATION என்பார்கள்
                     அல்லாஹ் சூழ்நிலைக்கு ஏற்றவாறே குர்ஆன் ஆயத்துகளை இரக்கியள்ளான்,ஆயிஷா (ரலி) அவர்கள் ,மது மதினாவில் முழுமையாக தடைசெய்யப்படாமல் மக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தால் இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்
                               கலீஃபாக்களின் காலத்திலிருந்து ஒரு உதாரணம்,உமர் (ரழி)வின் ஆட்சியின் போது பஞ்சம் நிலவியதால் பசிக்காக ஒருவன் திருடினால் இருக்கைகள் வெட்டப்படும் தண்டனை அப்போது செயல்பாட்டில் இருக்கவில்லை
                                   இமாம்கள் காலத்திலிருந்து ஓர் உதாரணம் இமாம் மாலிக் (ரஹ்)அவர்களுடைய மாணவர் ஒருவர் ஆப்ரிக்கா  சென்றபோது அங்கிருந்த மக்கள் தங்ஙகளின் பாதுகாப்பிற்காக தாங்கள் நாயக் பயன்படுத்திச் கொள்ளலாமா என்று கேட்ட போது அவர் ஆம் என்று கூற அதற்கு  அம்மக்கள் இமாம் அவ்வாறு அனுமதியில்லை என்று கூறியுள்ளாரே என்று கேட்ட போது அதற்கு அந்த மாணவர் "இமாம் அவர்கள் மட்டும் இங்கு நிலவிவரும் சூழ்நிலையை நேரடியாக கண்டால்  காவலுக்காக ஒரு சிங்கத்தை கூட வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்திருப்பார்கள்"என்றார்
                     அடுத்ததாக தலைமைத்துவத்தின் ஒரு சில வகைகளைப்பற்றி இங்கு காணலாம் LEADERSHIP STYLES
🔹AUTOCRATIC STYLE
சர்வாதிகாரம் 
🔹DEMOCRATIC STYLE
மக்களின் ஈடுப்பாட்டை ஆதரிப்பவர்
 🔹TRANSFORMATIC STYLE
சீர்திருத்த வாதி
🔹CHARISMATIC STYLE
மக்களை ஈர்க்கும் தன்மையுடையவர்

AUTOCRATIC STYLE:

                     இவ்வகையைச் சார்ந்த தலைவர்கள் தன்னிச்சையாக  முடிவெடுப்பார்கள்
*நபி (ஸல்அமைதிக்கான உடன்படிக்கையின் போது தன்னிச்சையாக முடிவெடுப்பார்கள் 
உதாரணம்:ஹூதைபியா உடன்படிக்கை 
DEMOCRATIC STYLE:
                                         இவ்வைக சார்ந்த தலைவர்கள் மக்களின் ஆலோசனையை விரும்புவார்கள்
*நபி(ஸல்) அவர்கள் போர் சமையத்தில் சஹாபாக்களிடம் ஆலோசிப்பார்கள்,உதாரணம்:பத்ரு போரின் மோது தமது படையின் முகாமை ஓர் நீர்நிலைப்பகுதியில் அமைத்த போது ஹபாப் இப்னு முன்தீர்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்:அல்லாஹ்வின் தாய அவர்களே! நாம் இங்கே முகாமை அமைத்துக் கொள்வது அல்லாஹ்வுடைய கட்டளையா அல்ல தங்களது சுய முடிவா என்று கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள் தமது சுய முடிவு என்று கூற இந்த சஹாபி:அல்லாஹ்வின் தூதரே நாம் இந்த பகுதியில் நம் முகாமை அமைத்துக் கொள்வதற்கு பதிலாக நீர்நிலைப்பகுதிக்கு கீழ் அமைத்துக் கொண்டால் அங்கு வர் குழியு தோண்டுவதின் மூலம் தண்ணீர் நரப்பிக் கொண்டு நமது தாக்கத்தை தணித்துக்கொள்ளலாம் சகித்துக்கொள்ள நபி (ஸல்)அவர்கள் அவ்வாரே செய்தார்கள்
                             மற்றொரு உதாரணம் உஹத் போருக்கு முன் நபி (ஸல்)சஹாபாக்களிடம் நாம் எதிரியை நோக்கி செல்வதா அல்லது அவர்கள் நம்மை நோக்கி விரும்ப அவர்களை முறியடிப்பதா என்று சஹாபாக்களிடம் ஆலோசனுக் கேட்டுவிட்டப்பின்பே மதினாவிலிருந்து புறப்பட்டார்கள் 

TRANSPORMATIVE STYLE:
                               இவ்வகையைச் சார்ந்த தலைவர்கள் பது புது சவால்களை மேற்கொள்வார்கள் புதிய மாற்றத்தையும் உருவாக்குவார்கள்
*நபி(ஸல்) அவர்கள் காட்டு மிராண்டி தனமாக இருந்த சஹாபாக்களை தமது நபித்துவத்தின் 23 ஆண்டுகளில் தலைமுறையிலு சிறந்த தலைமுறையாக மாற்றினார்கள்

CHARISMATIC STYLE:
                                      நபி(ஸல்) அவர்களுடைய குணம் அனுத்து விதமான மக்களையும் கவர்ந்தது 
ஒருவரை நம்பக்கம் இழுக்க வேணுடுமென்றால் நாம் அவர்களது அறிவையும் இதயத்தையும் சேர்த்து தொடவேண்டும் இதற்கு சிறந்த ஓர் உதாரணம் ,அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள موعظة என்ற வார்த்தையாகும் இதை வெரும் நல்லுபதேசம் என்று மொழி பெயர்த்தால் அது போதாது மாறாக موعظة என்பது வருவருடைய அறிவையும் இதயத்தையும் ஒரு சேர திருப்பதி  படுத்தக்கூடியதாகும்(which simultaneously  satisfied the heart and the intellect)
அல்குர்ஆன் ஒர் موعظة ஆகும் ஸூரதுல் ஆலுஇம்ரான்:138 (3:138)
هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ‏ 
 இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.

அல்லாஹ் மனிதன் செய்த குற்ற8த்தை எவ்வாறு கேட்கிறான் என்பதை பாருங்கள்
ஹூரதுல் தக்வீர்:8,9(81:8,9)
وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏ 
. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

 بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏ 

. “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-

மற்றொரு உதாரணம்
ஸூரதர் ரஹ்மான்:1,2(55:1,2)
اَلرَّحْمٰنُۙ‏ 
 அளவற்ற அருளாளன்,
                                                                                                                          عَلَّمَ الْقُرْاٰنَؕ‏
55:255:2 عَلَّمَ الْقُرْاٰنَؕ‏ 
 இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்

                                 அடுத்தாக ஓர் தலைவனுக்கு  தேவையான ஏழு அம்சங்களைப் பார்ப்போம்
1)தொலை நோக்கு பார்வை
இதற்கு ஓர் சிறந்த உதாரணம்
அலீ(ரழி)அவர்கள்:வானத்தை பார்த்தால் பழம் கிடைக்கப்போவதாக அர்த்தம் என்று கூறியுள்ளார்கள்
2)எதை மது மது வேண்டும் என்ற தெளிவு
3) செய்த தவறிலிருந்து பாடம் 
4) புதிய சவால்களை மேற்கொள்ளுதல்
5)விட்டுக் கொடுத்தல்
6)ஒற்றுமையாக இருத்தல்
7)சாதனைப் புறிதல் 
ஆக நாம் முன்னதாக பார்த்த அனைத்து வகையான விஷயங்களை வளர்த்துக் கொண்டாலே நாம் நம் தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதே இத்தலைப்பின் முடிவாக நாம் எடுத்துக்கொள்ளலாம்




Comments

Popular posts from this blog

சென்ற மாத இதழின் தொடர்ச்சி:             இன்று தொழுகையை பற்றி சில முஸ்லிம்களின் பார்வையானது, வெறும் சடங்காகவே பார்க்கப்படுகின்றது ,சிலர் அறியாமையால் அதை யோகா என்றும் கருதுகின்றனர் இதிலிருந்து நாம் சற்று மாற்றமாக சிந்திக் கடமைப்பட்டுள்ளோம்.             ஹய்யா அலல் ஸலாஹ் ஹைய்யா அலல் ஃபலாஹ்,தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொழியில் கேட்க கூடிய வாசகங்கள் தான்!                                                                                                                        قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏                                                    . ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்(23:1)                                                                                                                      الَّذِيْنَ هُمْ  في صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏  அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(23:2)                இந்த ஆயத்தில் நாம்  اَفْلَحَ  வெற்றி மற்றும் صل